Offline
Menu
கட்டமைப்பு இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலி
By Administrator
Published on 11/07/2025 17:30
News

தென் கொரியா, 7 நவம்பர் - தென் கொரியாவில், இடிக்கப்படும் நடவடிக்கைக்குத் தயாரான ஒரு மின் நிலையத்தின் பெரிய கட்டமைப்பு இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், அறுவர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகலில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் போது சம்பந்தப்பட்ட கட்டமைப்பின் சில பகுதிகளை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மின் நிலையத்தின் கட்டமைப்பு இடிந்து விழுந்தடன் அப்பகுதி முழுவதும் கட்டமைப்புக்களால் சூழ்ந்திருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில் காண முடிந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக தீயணைப்பு அதிகாரி கிம் ஜியங்-வெய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, இன்று அதிகாலை தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

Comments