மாட்ரிட்,ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். அந்நாட்டின் டெனெரிப் தீவு பிரபலமான சுற்றுலா தலமாகும். அந்த தீவின் கடற்கரையில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து கடலில் குளித்து மகிழ்வர்.
இந்நிலையில், வார விடுமுறையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தீவின் புவெர்ட்டோ டி லா குரூஸ் பகுதியில் பலர் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை அவர்களை தாக்கியது. இதில் பலரும் கடலில் இழுத்து செல்லப்பட்டனர். பாறைகளில் மோதி பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் கடலில் இழுத்து செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ராட்சத அலையில் சிக்கி பாறையில் மோதிய 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த கடற்கரை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.