Offline
Menu

LATEST NEWS

கிள்ளானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தேடப்படும் குற்றவாளி எவ்வாறு சமூகத்தில் சுதந்திரமாக நடமாட முடிந்தது- கெப்போங் எம்.பி கேள்வி
By Administrator
Published on 11/16/2025 02:20
News

கோலாலம்பூர்:

கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூடு சமூகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போலீசாரின் தேடல் பட்டியலில் இருந்த நபர் ஒருவர் அங்குள்ள பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையைத் தொடர்ந்து காவல்துறையின் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு முறையில் கேள்வி எழுப்பியுள்ளார் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், அதாவது போலீசாரின் தேடல் பட்டியலில் இருந்த குற்றவாளி எவ்வாறு சமூகத்தில் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்பதற்கான விளக்கத்தை கேட்டுள்ளார்.

இது, சட்ட அமலாக்க துறையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொலைக்குப் பின் விசாரணையில், போலீசார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளன. எனினும், தப்பி ஓடிய குற்றவாளியின் இருப்பிடத்தை முன்கூட்டியே போலீசார் அறிந்துள்ளனரா என்பது குறித்து பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது.

மேலும், இந்தச் சம்பவம் சமூகத்துக்கு குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் காவல்துறை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சமூகத்தில் அமைதி மற்றும் பொதுசுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

Comments