கோலாலம்பூர்:
லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட 11 அமலாக்க அதிகாரிகளுடன் தொடர்புடைய 3.1 மில்லியன் ரிங்கிட் பணம் இருப்பில் இருந்த 36 வங்கிக் கணக்குகளை முடக்க மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (MACC) நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்க MACC புலனாய்வு பிரிவு “ஆப்பரேஷன் பிளீச்” என்கிற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக, சமீபத்தில் 11 அமலாக்க அதிகாரிகள், அதில் ஒருவர் ஓய்வுபெற்ற அதிகாரி, கைது செய்யப்பட்டனர்.
இந்த அதிகாரிகள், வெளிநாட்டு ஊழியர்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (RTK) விண்ணப்பங்களை வேகமாக செயல்படுத்த லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 30 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள், மேலும் அவர்களில் நால்வர் பெண்கள்.
கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நவம்பர் 12 நடைபெற்ற திடீர் சோதனைகளில் அவர்கள் சிக்கினர் என்று, MACC தலைவர் ஆஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்