கோலாலம்பூர்,
நாடு முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி மைனிங்கிற்காக சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்திய 13,800-க்கும் மேற்பட்ட இடங்கள் 2020 முதல் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு இன்று தெரிவித்தது.
அதேகாலத்தில், இவ்வகை சட்டவிரோத பயன்பாட்டால் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்கு RM4.57 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் திருட்டை கட்டுப்படுத்த TNB, பொலிஸார் மற்றும் தொடர்புடைய முகமைகளுடன் இணைந்து சோதனை நடத்தி, மைனிங் இயந்திரங்களை பறிமுதல் செய்து, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து வருகிறது என்று அது மேலும் தெரிவித்தது.
மேலும், மின்சாரத் திருட்டின் ஆபத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்க அறிவு ஊட்டும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை பொதுமக்கள் புகாரளிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.
இதனிடையே, TNB நிறுவனம் மின்சாரத் திருட்டை கண்டறிவதற்காக ஸ்மார்ட் மீட்டர்கள் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது என்றும் அமைச்சகம் கூறியது.