Offline
Menu
இந்தியா மும்பை விமான நிலையத்தில் ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல் – 20 பேர் கைது
By Administrator
Published on 11/22/2025 14:09
News
மும்பை,மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு போதைப்பொருள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ. 53 கோடி ஆகும். இந்த கடத்தலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாய்,ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானமும் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

இந்நிலையில், துபாய் விமான கண்காட்சியில் இன்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 2.10 மணியளவில் சாகச செயலில் ஈடுபட்டிருந்தபோது தேஜஸ் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments