Offline
Menu
புதிய தேசிய மருத்துவக் காப்பீடு ‘MediAsas’ அறிமுகம்: மாதக் கட்டணம் RM60 முதல் தொடக்கம்; ஜூலை இறுதியில் சோதனை ஓட்டம்!
By Administrator
Published on 07/08/2026 11:00
News

மலேசிய மக்களின் மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கம் தனது புதிய அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை (MHIT) ‘MediAsas’ என்ற பிராண்ட் பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 'MediAsas Teras' (Standard Plan) மற்றும் 'MediAsas Fleksi' (Standard-Plus Option) என இரு பிரிவுகளாகச் செயல்படவுள்ளது.

மக்களின் வயது மற்றும் மருத்துவக் கோரிக்கைகளின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், இதற்கான மாதக் காப்பீட்டுச் சந்தா (Premium) RM60 முதல் RM550 வரை மிகக் குறைவாக இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 70 வயது வரை உள்ளவர்கள் இணைந்து, அதிகபட்சமாக 85 வயது வரை மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.

இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் (Pilot Programme) இந்த ஜூலை மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் வரை கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) பகுதியில் நடைபெறவுள்ளது. AIA, Allianz, Great Eastern, Prudential BSN, Etiqa மற்றும் Takaful Malaysia ஆகிய 6 முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் இதில் பங்கெடுக்கின்றன. இந்தச் சோதனை ஓட்டத்தின் முடிவுகளைக் கொண்டு, 2027 ஜனவரியில் நாடு தழுவிய அளவில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்.

Comments

More news