Offline
Menu
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாதுகாப்புப் படையினருக்காக 38 முன்வாக்குப்பதிவு மையங்கள் திறப்பு!
By Administrator
Published on 07/29/2026 15:00
News

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக 22,339 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவியர்கள் வாக்களிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 38 முன்வாக்குப்பதிவு (Early Voting) மையங்கள் இன்று காலை 8:00 மணிக்குத் திறக்கப்பட்டன.

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் (EC) புள்ளிவிவரங்களின்படி, மலேசிய ஆயுதப்படையைச் (MAF) சேர்ந்த 16,884 வீரர்களும் அவர்களின் துணைவியர்களும் 8 சிறப்பு வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்கின்றனர்.

அதெல்லாம் மலேசிய அரசுக் காவல் துறையைச் (PDRM) சேர்ந்த 5,455 அதிகாரிகளும் அவர்களின் துணைவியர்களும் 30 வாக்குப்பதிவு மையங்களில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

வாக்குப்பதிவு மையங்கள் தேர்தல் ஆணையத்தின் அட்டவணைக்கு ஏற்ப நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பல்வேறு கட்டங்களாக மூடப்படும்.தேர்தல் கள நிலவரம்:இன்று மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல வெயில் மற்றும் தெளிவான வானிலை நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள பொது வாக்குப்பதிவில், ஏறத்தாழ 889,490 சாதாரண வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மாநிலத்தில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 103 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

Comments