Offline
Menu
RON97, RON95, டீசல் விலைகள் 10 முதல் 20 சென் வரை அதிகரிப்பு
By Administrator
Published on 08/21/2026 14:00
News

மலேசியாவில் மானியங்கள் இல்லாத RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் லிட்டருக்கு 10 சென் முதல் 20 சென் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

இன்று ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 26 வரை அமலில் இருக்கும் இந்த புதிய எரிபொருள் விலை மாற்றங்கள் குறித்து நிதியமைச்சு வெளியிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், RON97 லிட்டருக்கு 10 சென் உயர்ந்து, RM4.15-லிருந்து RM4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மானியமில்லா RON95 லிட்டருக்கு 15 சென் உயர்ந்து, RM3.62-லிருந்து RM3.77 ஆக அதிகரித்துள்ளது.

மானியமில்லா டீசல் (Diesel) லிட்டருக்கு 20 சென் உயர்ந்து, RM4.47-லிருந்து RM4.67 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே வேளையில், அரசின் உதவித்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மானிய விலை எரிபொருட்களின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என நிதியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது:

BUDI 95 திட்டத்தின் கீழ் மானிய விலையிலான RON95 பெட்ரோல் தொடர்ந்து ஒரு லிட்டர் RM1.99 என்ற நிலையான விலையிலேயே விற்கப்படும் என்றும், BUDI Diesel திட்டத்தின் கீழ் மானிய விலையிலான டீசல் தொடர்ந்து ஒரு லிட்டர் RM2.10 என்ற பழைய விலையிலேயே நீடிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Comments