மலாக்கா மாநில மக்களின் நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மொத்தம் 128.2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான. கெபிகெடி -யின் Jelajah Sentuhan Kasih நிகழ்ச்சியின் போது, மலாக்காவில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு முக்கியத் திட்டங்களை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த ஆண்டு மலாக்காவில் மொத்தம் 24 வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுங்காய் ஊடாங் திடக்கழிவு நிலப்பரப்பு தளத்திற்கு 32.8 மில்லியன், 390 ருமா மெஸ்ரா ராக்யாட் வீடுகளுக்கு 29.6 மில்லியன், பொது உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கு 24.9 மில்லியன் மற்றும் பாடங்தெமு பிரிமா திட்டத்திற்கு 10 மில்லியன் ஆகியவை முக்கியமான ஒதுக்கீடுகளாகும்.
மேலும், கிலேபாங் புக்கிட் கட்டில் Klebang, மற்றும் பாயா ரும்புட் பகுதிகளில் ரிசிடென்சி ராக்யாட் திட்டங்களுக்கு 8.5 மில்லியன், வீடமைப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு 5.8 மில்லியன், மலாக்காவில் உள்ள 35 இந்து அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 5.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற ஏழை மக்களின் வீடுகளைப் பழுதுபார்க்கவும் புதிய வீடுகள் கட்டவும் 4 மில்லியன், பொது பூங்காக்கள் மற்றும் இயற்கைக் காட்சியமைப்பை மேம்படுத்த 2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜாலான் குபு தீயணைப்பு நிலையத்தை மேம்படுத்த 877,000, கம்போங் பாரு ஆறு பகுதிகளின் மேம்பாட்டிற்கு 745,000, மலாக்கா மாநில கட்டமைப்புத் திட்டம் 2040, ஸ்மார்ட் சித்தி மற்றும் பாதுகாப்பான நகரத் திட்டங்களுக்கு 3.7 மில்லியன் வழங்கப்பட உள்ளது.
“அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களின் பயன்களும் மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதில் அமைச்சு உறுதியாக உள்ளது. தரமான வீடுகள், வசதியான பொது வசதிகள் மற்றும் பாதுகாப்பான, நிலையான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதே நோக்கம்,” என அமைச்சர் தெரிவித்தார்.