Offline
Menu
SPRM அலுவலகத்தில் குடும்பத்துடன் ஆஜரானார் எம். சரவணன்!
By Administrator
Published on 09/28/2026 18:00
News

சொத்து விபர அறிவிப்பு நோட்டீஸைப் பெற SPRM அலுவலகத்தில் குடும்பத்துடன் ஆஜரானார் எம். சரவணன்!

 

புத்ராஜெயா:

 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) உத்தரவின்பேரில், தனது சொத்து விவரங்களைப் பிரகடனப்படுத்துவதற்கான நோட்டீஸைப் பெற முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று காலை புத்ராஜெயா SPRM தலைமையகத்தில் ஆஜரானார்.

 

காலை 9.00 மணியளவில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வந்தடைந்த அவருக்கு, SPRM சட்டம் 2009 பிரிவு 36-இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 

முன்னதாக, வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டில் லஞ்சம் பெற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 28-இல் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments