Offline
Menu
ஈப்போ அருகே மூதாட்டி படுகொலை
By Administrator
Published on 09/28/2026 18:30
News

ஈப்போ அருகே மூதாட்டி படுகொலை: மனநலப் பாதிப்புள்ள மகள் கைது!

 

கோலாலம்பூர்:

ஈப்போ அருகிலுள்ள மெங்லெம்பு, Taman Wang பகுதியில் உள்ள Lorong Kledang Utara 6-இல் உள்ள வீடு ஒன்றில், படுகாயங்களுடன் முதாட்டி ஒருவர் உயிரிழந்துகிடந்த சம்பவத்தில் அவரது 49 வயது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

படுக்கையில் முடங்கி தீவிரக் கவனிப்பு தேவைப்பட்ட 70 வயதுடைய தாயாரைப் புசிங் முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து பராமரித்து வந்ததாகப் பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி சைனல் அபிடின் தெரிவித்தார்.

 

மனநல மருத்துவச் சிகிச்சை வரலாறு கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரணைக்காக அவர் அக்டோபர் 4-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றார்.

 

இதனிடையே, கோலா கங்சார், Kampung Cheh Kati-யில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் உயிரிழந்த மற்றொரு சம்பவத்தில், விசாரணைக்கு உதவத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுவன் மேல் சிகிச்சைக்காக Ulu Kinta மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல் துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்.

Comments