Offline
Menu
5 விமானப்படை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது!
By Administrator
Published on 11/21/2026 13:00
News
இராணுவ விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல்

மலேசிய இராணுவ விமானங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைகளுக்குப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்த பாரிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் அடையாளம் கண்டு முறியடித்துள்ளனர்.

மலேசிய அரசாங்க விமானப்படை (RMAF) அதிகாரிகள் ஐவர் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிர்ச்சியூட்டும் கடத்தல் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் இன்று (நவம்பர் 20) வெளியிட்ட முக்கிய விவரங்களின்படி, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லபுவான் ஆகிய பகுதிகளில் விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் சுமார் RM4.83 மில்லியன் மதிப்புள்ள 96.64 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 6.98 கிலோகிராம் எடையுள்ள திரவ இரசாயனப் பொருட்களும் சிக்கியுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சர்வதேச நாடுகளுக்குக் கடத்தப்படுவதற்கு முன்னதாக, இராணுவ விமானங்கள் மூலம் சபா மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாக நம்பப்படுகிறது.

கைதானவர்களில் விமானப்படையை சாராத இரு நபர்கள், இக்கடத்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் முகவர்களாகச் செயல்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இக்கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்படும் தலைவன் என நம்பப்படும் மற்றொரு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இக்கும்பலின் முழுமையான கட்டமைப்பு மற்றும் இதில் வேறு தரப்பினருக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments