Offline
Menu
மவுண்ட் ஆஸ்டின் பள்ளிக்கு அருகிலுள்ள வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
By Administrator
Published on 11/21/2026 13:00
News

ஜோகூர் பாரு: தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகில், வடிகால் ஒன்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படும் ஒரு ஆடவரின்  உடல் கண்டெடுக்கப்பட்டது. ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பொறுப்பாளர் முகமது ஃபைஸ் ராம்லி கூறுகையில், புதன்கிழமை (நவம்பர் 18) பிற்பகல் 2:40 மணிக்கு இது குறித்த தகவல் ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்திற்கு கிடைத்ததாகத் தெரிவித்தார்.

எங்கள் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்தோம். அவர்கள் பிற்பகல் 2:47 மணிக்கு அங்கு சென்றடைந்தனர்” என்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற குழுவினர், வடிகாலுக்குள் இருந்த அந்த உடலை பிரத்யேக உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்டனர் என்று முகமது ஃபைஸ் தெரிவித்தார். உயிரிழந்தவரின் உடலை மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம் என்று கூறிய முகமது ஃபைஸ், இந்த மீட்புப் பணி பிற்பகல் 3:51 மணியளவில் நிறைவடைந்ததாகத் தெரிவித்தார்.

Comments