Offline
மின் கம்பத்தை மோதிய வாகனம் சாலையில் தடம் புரண்டது: மரிய ஜோசப்புக்கு கை துண்டானது
Published on 10/02/2024 13:44
News

மலாக்கா ஜாசினில் உள்ள பெம்பான் கப்பாம் சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று சாலையின் மத்தியில் தடம் புரண்டதில் அதனை ஓட்டி வந்த ஆடவரின் வலது கை மணிக்கட்டுப் பகுதி துண்டிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை 5.45 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் மரிய ஜோசப் என்ற 51 வயது ஆடவர் மணிக்கட்டை பறிகொடுத்தார்.

மண்டோராகப் பணிபுரியும் அவர், பெம்பானில் இருந்து மலாக்கா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவரது மிட்சுபிஷி டிரைதோன் வாகனம் சாலையில் தடம் புரண்டது.

சம்பவத்தின்போது மழை பெய்து விட்டிருந்ததால் ஈரமான பாதையில் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிச் சென்று மின் கம்பத்தை மோதியது என்று ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி அமாட் ஜமில் ரட்சி தெரிவித்தார்.

 

Comments