Offline
Menu
நாளை முதல் 9 அக்டோபர் வரை RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
Published on 10/03/2024 12:40
News

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் RON97 மற்றும் RON95 பெட்ரோலின் சில்லறை விலை நாளை முதல் 9 அக்டோபர் வரை முறையே லிட்டருக்கு RM3.19 மற்றும் RM2.05 ஆக உள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு ரிங்கிட் 2.95 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய நகரங்களில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருந்ததாக நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments