Offline
கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்த ஆடவர்
Published on 10/04/2024 00:44
News

அலோர் ஸ்டார்: லங்காவி கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது ஒருவர் சுமார் 50 மீட்டர்  பள்ளத்தில்  விழுந்தார். கைருல் நிஜாம் ஜாஃபர் (41) என அடையாளம் காணப்பட்ட அந்த நபரை கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

லங்காவி மண்டலம் 4 தலைவர் ஜம்ரி அப்த் கானி கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு மதியம் 1.15 மணியளவில் தெரிவிக்கப்பட்டது என்றும், மீட்புப் படையினர் சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அந்த இடத்தை அடைந்ததாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட, கேபிள் கார் பராமரிப்புப் பணியாளர், இரண்டாம் நிலை பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது (மேடையில்) தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது.

பலியானவர் 40 முதல் 50 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தார். அவரது நிலை குறித்து இன்னும் தெரியவில்லை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தனது குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Comments