Offline
Menu
ஃபுல் போதையில் காரில் என்னுடன் இருந்தார் கங்கனா – பிரபல பாடகர் பகீர் தகவல்
Published on 10/05/2024 12:23
News

பிரபல நடிகையும், சர்ச்சை கருத்துக்களை கூறி வருபவருமான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உரையாற்றும் போது பஞ்சாப் மாநிலம் பற்றி பேசியிருந்தார். பஞ்சாப் மாநில மக்கள் குறித்து இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு முன்னணி பாடர் ஜஸ்பிர் ஜாசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரா கூட்டத்தில் பேசிய கங்கனா ரனாவத், “பஞ்சாப் மாநிலத்தில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது, அங்குள்ள இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர் ஆனால் இமாச்சல பிரதேசத்தில் முற்றிலும் முரணாக உள்ளது. பஞ்சாப் மக்களை போல் பாதிக்கப்பட வேண்டாம் என இமாச்சல பிரதேச இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.

இவரது இந்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்த பாடகர் ஜாசி, “இதை நான் இப்போது கூற கட்டாயப்படுத்தப்பட்டேன். அவர் பஞ்சாப் மக்களை அதிகளவில் தாக்கி வருகிறார். ஒருமுறை அவர் மற்றும் அவரது பெண் தோழி டெல்லியில் எனது காரில் அதிகளவு குடித்தார். அவர் நிலைதடுமாறி இருந்தார்.”

“அவர் எடுத்துக் கொண்டு மது மற்றும் போதைப் பொருள், வேறு யாரும் அந்த அளவுக்கு எடுத்துக் கொண்டதை நான் பார்த்ததே இல்லை. பஞ்சாப் பற்றி பேசுவதை அவர் நிறுத்தவில்லை எனில், அவரைப் பற்றிய எல்லாவற்றையும் நான் கூறிவிடுவேன்,” என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

Comments