Offline
காணாமல் போனதாக நம்பப்பட்ட சிறுவன் நீரில் மூழ்கி இறந்த துயரம்
Published on 10/10/2024 15:00
News

ஷா ஆலம்: தெலோக் பங்லிமா கராங், புலாவ் கேரியில் செவ்வாய்க்கிழமை குளிக்க சென்றபோது காணாமல் போன சிறுவன் புதன்கிழமை நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டார். கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமட் நோர் கூறுகையில் 17 வயது இளைஞனின் உடல் அதிகாலை 3.15 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறு தொலைவிலேயே அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சிறுவன் ஆறு நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அப்பகுதிக்கு சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுடன் மூன்று நண்பர்களும் மாலை 6.40 மணியளவில் தண்ணீரில் இறங்கினர். முதற்கட்ட அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் நீந்திக் கொண்டிருந்தனர்.

சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒருவர் காணாமல் போனதை அவரது நண்பர்கள் கவனித்தனர். மேலும் அவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக சந்தேகித்தார்கள்  என்று அவர் கூறினார். சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்டவரின் உடலை முதற்கட்ட பரிசோதனை செய்ததில் முறைகேடு நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக பந்திங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது

Comments