Offline
மலாக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம்!
Published on 10/13/2024 19:02
News

மலாக்கா:

ஜாலான் புக்கிட் சென்ஜுவாங்கில் நேற்று மாலை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயத்துடன் உயிர் தப்பினர்.

மாலை 6 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஜிடான் (22) என்பவர் கான்கிரீட் தூணின் இடிபாடுகளுக்கு இடையே உடல் நசுங்கி இறந்து கிடந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் இரவு 9.55 மணிக்கு இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார், ஆனால் அவரது சடலம் நேற்று நள்ளிரவு 12.16 மணிக்கு மட்டுமே இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த விபத்தில் கழுத்து, தோள்பட்டை மற்றும் தலை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயமடைந்த பாகிஸ்தான் பிரஜைகளான ஜுபைர் அகமட், 32, மற்றும் அப்பாஸ் குலாம், 49, ஆகியோர் மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் நேற்று மாலை 6.40 மற்றும் 8.45 மணிக்கு இடிபாடுகளுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறினார்.

Comments