Offline
அடுக்குமாடியின் 14ஆவது ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த பெண்
Published on 10/13/2024 19:04
News

டாமன்சாராவில் உள்ள பாம் ஸ்பிரிங் அடுக்குமாடியின் 14ஆவது மாடியில் இன்று காலை தீ பரவியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு ஆணும் பெண்ணும் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், துறைக்கு காலை 8.39 மணிக்கு அழைப்பு வந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுங்கை பூலோ நிலையங்களில் இருந்து 21 பணியாளர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். சுவிட்ச் பாக்ஸ் பழுதானதால் தீ விபத்து ஏற்பட்டதாக முகிலிஸ் கூறினார். 31 வயதான பாதிக்கப்பட்டவர் குளியலறையில் இறந்து கிடந்தார் என்று அவர் கூறினார். அவர் புகையை சுவாசித்ததால் இறந்ததாக நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட மற்ற இருவரும் 24 வயதுடைய ஒரு பெண் மற்றும் 29 வயதுடைய ஒரு ஆண் ஆவர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

 

Comments