Offline
6 வயது சிறுவன் துன்புறுத்தல் – தந்தையும் மாற்றாந்தாயும் கைது
Published on 10/13/2024 19:05
News

ஈப்போ: பாகன் செராயில் துன்புறுத்தலுக்கு ஆளான  ஆறு வயது சிறுவனின் தந்தை மற்றும் மாற்றாந்தாய் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 10ஆம் தேதி மாலை 4.09 மணிக்கு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக கிரியான் காவல் துணைத் தலைவர் ஜூனா யூசோஃப் தெரிவித்தார்.

47 வயதான ஆணும் 33 வயது பெண்ணும் பாகன் செராயில் உள்ள லாடாங் கெளும்பொங்கில் உள்ள வீட்டில் ஒரே நாளில் மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். சிறுவனுக்கு காயம் ஏற்படுத்த சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் பல பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். கெத்தும் என்று நம்பப்படும் திரவம் கொண்ட மூன்று பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர் சனிக்கிழமை (அக். 12) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அடிபட்டதால் அவரது முகம், மார்பு, வயிறு, இரு கைகள், கால்கள் மற்றும் தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை மருத்துவர் உறுதிப்படுத்தியதாகவும்  ஜூனா கூறினார். பாதிக்கப்பட்டவர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) மற்றும் விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். சந்தேகநபர்கள் இருவரும் அக்டோபர் 14ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments