Offline
Ironman Malaysia சைக்கிள் பந்தயத்தின்போது விபத்து; மூவார் MP சையட் சாதிக் காயம்
Published on 10/13/2024 19:08
News

லங்காவி:

லங்காவியில் நடைபெற்ற Ironman Malaysia சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற மூவார் எம்.பி.யும், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான சையட் சாதிக் சைக்கிள் விபத்தில் சிக்கி, காயமடைந்தார்.

31 வயதான சையட், சைக்கிள் ஓட்டிவந்த வழியில் திடீரென விழுந்த மரக்கிளையில் சைக்கிள் மோதியதில் சிறு காயத்துக்கு உள்ளானார்.

இந்தச் சம்பவத்தை மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி இந்த சம்பவத்தை உறுதி செய்தார்.

இருப்பினும் விபத்து எப்படி ஏற்பட்டது அல்லது சையட்டின் காயங்களின் அளவு குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

Comments