Offline
சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் 50 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்
Published on 10/16/2024 00:37
News

சஹாரா :

கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்திஉள்ளது.

வட ஆப்ரிக்காவில் சஹாரா பாலைவனம் உள்ளது. உலகின் மிகப்பெரிய பாலைவனமான இது, மொராக்கோவின் தெற்கு பகுதியில் அமைந்துஉள்ளது.

இந்த பாலைவனத்தில் மிக கொடிய விஷமுள்ள உயிரினங்கள் உள்ளன. மணல் திட்டுகளுடன் மிகவும் சூடாக இருக்கும் இந்த பாலைவனத்தில் மழைப் பொழிவு என்பது மிகவும் அரிதான விஷயம்.

சஹாரா என்றாலே வறட்சி, மணற்பரப்பு, வெப்பம் மட்டுமே நினைவுக்கு வரும் நிலையில், இந்த ஆண்டு அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தென் கிழக்கு மொராக்கோவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

தலைநகர் ரபாத்தில் இருந்து, 450 கி.மீ., தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில், ஒரே நாளில், 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழையைவிட அதிகம் என கூறப்படுகிறது.

Comments