Offline
ஆந்திராவில் 55 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்
Published on 02/23/2025 11:54
News

திருப்பதி:ஆந்திரா மாநில அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.

புகாரில் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித அனுமதியோ விடுப்போ எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.இது குறித்து ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 55 அரசு டாக்டர்களை பணி நீக்கம் செய்தனர்.

Comments