Offline
பெற்ற குழந்தையை தொப்புள் கொடியுடன் ஓட்டல் மாடியில் இருந்து கீழே வீசியெறிந்த தாய்..
Published on 02/26/2025 11:21
News

18 வயது அமெரிக்கப் பெண் ஒருவர், தனது பிறந்த குழந்தையை ஹோட்டல் ஜன்னலுக்கு வெளியே “தொப்புள் கொடியுடன்” தூக்கி எறிந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு பாரிஸில் உள்ள போர்ட் டி மாண்ட்ரூயிலில் அமைந்துள்ள ஐபிஸ் ஸ்டைல்ஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 18 வயது மாணவியான அப்பெண் ஹோட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் பிரசவித்து, பின்னர் தனது குழந்தையை துணி சுற்றி ஜன்னலுக்கு வெளியே தொப்புள் கொடியுடன் நேற்று (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் வீசியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹோட்டல் முன் தொப்புள் கொடியுடன் துணியால் சுற்றப்பட்ட ஒரு குழந்தை கிடந்ததை அங்குள்ளவர்கள் பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.

உடனே குழந்தை மீட்கப்பட்டு ம்ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை கடுமையான காயங்களால் காலை 7:45 மணியளவில் இறந்தது.

அறையிலேயே பிரசவித்த பெண்ணின் நிலையும் மோசமான நிலையில் அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணை போலீசார் காவலில் வைத்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவர் குழுவில் அப்பெண் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

Comments