சிபுவில் எரிபொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 10 பேர் கைது!
சிபுவில், ஜாலான் லிங் கை செங்கில் உள்ள சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த எரிபொருளைக் கைப்பற்றிய போலீசார், 10 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் 29,370 லிட்டர் டீசல் (மொத்த மதிப்பு RM 63,145.50) மற்றும் பல்வேறு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபு OCPD உதவி ஆணையர் சுல்கிப்ளி சுஹைலி அறிவித்தார்.
பொதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM 575,693.50 ஆகும். மேலும், சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், குற்றப்பினாய்வு துறையை மேம்படுத்த, நவீன புலனாய்வு நுட்பங்களைப் பயன்படுத்தும் முக்கியத்துவத்தையும் ACP சுல்கிப்ளி வலியுறுத்தினார். சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் காரணமாக, காவல்துறையினர் சமகால அபாயங்களை எதிர்கொள்ள தேவையான திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திற்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளிலும் காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையைக் தெரிவித்துள்ளார்.