மலேசியா: பி. ராமசாமியின் கட்சி பதிவு நிராகரிப்பு – நீதிமன்றம் மறுஆய்வு அனுமதி!
மலேசியாவில் முன்னாள் டிஏபி தலைவர் பி. ராமசாமியின் "உரிமை" கட்சி, அரசாங்கம் அதன் பதிவை நிராகரித்ததற்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளை தொடங்க உயர் நீதிமன்றத்திலிருந்து அனுமதி பெற்றுள்ளது.
சங்கங்களின் பதிவாளர் (RoS) கட்சியின் விண்ணப்பத்தை நிராகரித்ததற்கான காரணங்களை விளக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் மேல்முறையீட்டை ஏன் பரிசீலிக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் அறிவிக்குமாறு கட்சி வலியுறுத்தியுள்ளது.
உரிமையின் கோரிக்கை:
* RoS முடிவை ரத்து செய்யும் உத்தரவு
* 14 நாட்களில் கட்சியை பதிவு செய்ய உத்தரவு
* மாற்றாக, மேல்முறையீட்டை பரிசீலி்க்க உள்துறை அமைச்சரை கட்டாயப்படுத்தும் உத்தரவு
இந்த வழக்கு மலேசிய அரசியல் வரலாற்றில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.