Offline
போப் பிரான்சிஸ் உடல் நிலை: நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் உண்மையா?"
Published on 03/01/2025 02:56
News

போப் பிரான்சிஸ் உடல்நிலை: பரபரப்பை கிளப்பும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு!

கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ரோமின் ஜெமெலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம், போப் ஆண்டவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் இருந்தாலும், வயது காரணமாக அவரது நிலை மாறிக்கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளது. அவருடைய விரைவான மீட்பிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 16ம் நூற்றாண்டின் பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் கணித்த ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மிக வயதான ஒரு போப்பின் மரணத்திற்குப் பிறகு, குறைந்த வயதுடைய ஒரு ரோமன் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அவர் நீண்ட காலம் சேவையாற்றுவார் என்றும் அவர் கணித்ததாக கூறப்படுகிறது.

போப் பிரான்சிஸ் உடல்நிலை அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த கணிப்பு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Comments