நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்: பரபரப்பு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு, வேறொரு வழக்கில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவரது வீட்டின் வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை வீட்டின் காவலாளர் கிழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரவீன் ராஜேஷ் வீட்டிற்குள் நுழைய முயன்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. பின்னர் காவலாளி மற்றும் சம்மனை கிழித்தவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அரசியல் தரப்பில் பேசுபொருளாக இருக்கும் நேரத்தில், 2019-ல் வழக்கறிஞர் பார்த்திபனை தாக்கிய வழக்கில், பிரவீன் ராஜேஷுக்கு 3-ம் தேதிக்குள் ஆஜராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.