Offline
சபாவில் வெள்ளம் சீரடைகிறது
Published on 03/02/2025 14:39
News

கோத்தா கினாபாலு:

சபாவின் பைதான் மாவட்டம் வெள்ளத்தில் இருந்து மீண்டுள்ளது, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, அங்கு இயங்கிவந்த இரு தற்காலிக துயர் துடைப்பு மையங்களும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன.

இதற்கிடையில், தெலுபிட் மாவட்டத்தில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில் 102 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இன்னமும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சபா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

“தெலுபிட்டில் ஆறு கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று அது நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments