Offline
டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு சங்கரத்னா விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வாழ்த்து
Published on 03/02/2025 14:42
News

மலேசிய இந்து சங்கப் பேரவையில் “சங்கரத்னா” என்ற உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ம.இ.காவின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மேனாள் அமைச்சராக அவர் ஆற்றிய அரசியல் பணிகளுக்கு நிகராக தமிழ் இலக்கியம் மற்றும் இந்து மதத்திற்கு ஆற்றிய அவரது பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. போற்றத்தக்கவை என்று  மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  தலைவர் மோகனன் பெருமாள் தெரிவித்தார்.

டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் இந்து மதத்தில் ஆழ்ந்த அறிவைக் கொண்டு, மலேசியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் இந்திய சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அவரது பணிகள் சமூகம், மதம் மற்றும் இலக்கியத் துறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மலேசிய இந்து சங்கத்தின் தேசியப் பேரவையால் “சங்கரத்னா” என்ற உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இந்த மாபெரும் சாதனைக்கு நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம். உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன். தகுதியான மனிதருக்கு தரமான விருதளிப்பு செய்த மலேசிய இந்து சங்கப் பேரவைக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வழி டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்களின் சமூகம், இலக்கியப் பணிகளையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவு கூறுகிறோம் அவரது அரசியல், இலக்கிய, சமயப் பணிகள் மேலும் சிறப்புற தொடர மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க டத்தோ ஸ்ரீ எம். சரவணன்! வாழ்க தமிழ்!

Comments