செனாயில், தாமான் தேசா இடமானில் பெய்ன்ட் கிடங்காக பயன்படுத்தப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று ஆடவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில், அருகிலுள்ள இரண்டு வளாகங்கள் 50 விழுக்காடு சேதம் அடைந்தன. பெயிண்ட் கடையின் ஊழியர்கள், மூவர் தீக்காயங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.குறிப்பிட்ட கடைகளில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனதாக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமட் பவ்சி அவாங் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.மேலும் தீவிபத்துக்குள்ளான இடத்தில் இரசாயனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லையென தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.