ஜோகூர் மாநில அரசு ஏப்ரல் 28ஆம் தேதி அனைத்து ஜோகூர் மக்களுக்கும் சிறப்பு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.ஜேடிதி அணியின் சாதனைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதற்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.மேலும் நாளை நடைபெறவிருக்கு ஸ்ரீ பஹாங் அணிக்கு எதிரான மலேசியா கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு வெற்றிகரமாக முன்னேறியதற்காக ஜேடிதி அணிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.ஜோகூர் சுல்தான் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலின் உத்தரவின் அடிப்படையில், ஜோகூர் அரசு ஏப்ரல் 28 திங்கட்கிழமை மாநிலத்தில் பொது விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.