மஇக தொடர்ந்து பாரிசான் நேஷனல் கூட்டணியில் நிலைத்திருக்கும் என கணிக்கப்படுகின்றது.
ஒரு வேளை அக்கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்தால் அங்கு நிலையான ஆதரவு கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என கூறப்படுகின்றது.
பெரிக்காத்தான் நேஷனல் மலாய்- இஸ்லாமிய கொள்கையை முன்னிறுத்துவதால் அக்கூட்டணி மீது மலாய்க்காரர் அல்லாதார் அதிக நாட்டம் கொண்டிருக்க வில்லை என்பதை மஇகா உணர வேண்டும் என்று மலேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி கருத்துரைத்துள்ளார்.
அதிலும் தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி பெரிக்காத்தானில் இணைவதற்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் உட்பட மஇகா தலைமைத்துவம் இன்னமும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
அக்கட்சியின் உறுப்பினர்களும் இதனை உணர்ந்து பாரிசான் நேஷனலில் நிலைத்திருக்க முடிவெடுப்பர்.
அக்கூட்டணியில் வெளியேற மஇகா முடிவு செய்தால் அது மிகவும் விபரீதமான முடிவாக இருக்கும் என்றார் அவர்.
இதனிடையே மஇகா பாரிசான் நேஷனலில் தான் நிலைத்திருக்க வேண்டும். காரணம் ஒரு வேளை அக்கட்சி பெரிக்காத்தானில் இணைந்தால்
அக்கட்சி மலாய்க்காரர் அல்லாதோர் குறிப்பாக இந்தியர்களின் ஆதரவை கவர முடியாது என்று அகாடாமி நுசாந்தாராவை சேர்ந்த அஸ்மி ஹசான் கூறினார்.
பலமான கூட்டணி இல்லையென்றால் மஇக பலவீனமாகிவிடும். அதோடு மஇகாவை தவிர்த்து நம்பிக்கை வைக்கக் கூடிய வேறு கட்சிகள் இருக்கின்றன என்பதை இந்திய சமூகமும் அறியும்.
மேலும் தீவிர சமயவாத கட்சி என்று கருதப்படும் பாஸ் கொள்கைகளும் இந்தியர்கள் பெரிக்காத்தானுக்கு வாக்களிப்பதற்கு தடையாக உள்ளன என்றார் அவர்.