ஸ்பெயின் சாம்பியன் பார்சிலோனா அணி, ஜப்பானின் விசெல் கோபே அணிக்கு எதிரான தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் முன்னோட்டப் போட்டியை "கடுமையான ஒப்பந்த மீறல்கள்"காரணமாக ரத்து செய்துள்ளது. ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் தென் கொரியாவில் நடைபெறவிருந்த போட்டிகளும் ரத்தாகக்கூடும் என பார்சிலோனா எச்சரித்துள்ளது. தென் கொரிய போட்டிகளின் விளம்பரதாரர்கள், ஜப்பான் போட்டி ரத்துக்கு ஜப்பானிய அமைப்பாளர்களே காரணம் என்றும், தென் கொரிய போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.